jeudi 19 février 2009
அன்று பெற்றேடுத்தார்கள்.. இன்று தத்தெடுப்போம் !!
வீதியெங்கும் வண்ணதாள்களை நட்சத்திரமாய்
ஆர்ப்பரித்து, அலங்கரித்து
ஆயிரம் கடன் இருந்தும்
தங்க மணலில் தன் மகன் பெயரெழுதி,
(சு)வாசித்தனர் அவனை பெற்றோர் !!
உயிரிலே கலந்த உறவாய்,
ஒரு தெய்வமகனாய் உயர்த்தினர்.
அவனுயர, தானே எண்னைணயும் திரியும் ஆகி
தன் மகன் வாழ்வில் ஒளியேற்றினர் !!
முடிந்தது பள்ளிப்படிப்பு,
துவங்கியது பட்டப்படிப்பு
வரவுகளின்றி செலவுகள் பல செய்து,
Cell phone Bill சகிதம் அனைத்தும்,
Special Fees என பெற்றோர் வசம் சுமத்தி,
நினைவறிய குறையின்றி வளர்த்தோரை,
மறந்து, மறைத்து
தேடுகிறாய் உனது வாழ்கை துணையை !!
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த பாசமறியா மைந்தனை நினைக்கையில்
பெற்றோரின் கண்ணீரால் வளர்ந்த பூ
என்பதாலோ என்னவோ,
இவனுக்கில்லை இரக்கம்,
ஒரு துளி .. ..
மேல் நாட்டில், வேலைக்காரி சம்பளம் மிக உயர்வு,
மேல் நாட்டில், வேலைக்காரி சம்பளம் மிக உயர்வு,
எதற்கு வீண்செலவு?
தாயை மட்டும் அழைத்து செல்கிறான்,
சம்பளமில்லா வேலைக்காரியாக !!
மலர் மாலையாக இருந்தவளை
மலர்வளையமாக மாற்றி விட்டான்
நண்பனே நினைத்து பார்?
திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடலாம்.
தினறடிக்கலாமோ உனது பெற்றோரை ??
இழிவு இழிவு பெற்றோரை நோதல் இழிவு,
அதனினும் இழிவு அவர் பிரிந்து வாழ்தல் !!
உடனே ஒன்றுபடு! உணர்ந்து செயல்படு !!
இன்றேல்,
அன்று உன்னை பெற்றேடுத்தார்கள்
இன்று நாங்கள் தத்தெடுப்போம் .. ..
வேண்டாமே அந்த இழி சொல் !!